தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியிலுள்ள வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் வைகை அணை இரண்டு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.
அங்கிருந்து வைகை ஆற்றில் தண்ணீர் மதுரை நோக்கி சீறிப் பாய்ந்து, இருகரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து ஓடுகிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில் கையாற்றில் தொடர்ந்து 3ஆவது நாளாக வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால், அப்பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நீர் நிரம்பி காணப்படுகிறது.
நீரில் முழ்கியுள்ள நெற்பயிர்கள் இதனால் ஆங்காங்கே பாசனக் கால்வாய்கள் உடைந்து, சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளான காடுபட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் உள்ள நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது.இதனால் சுமார் 25 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாழானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்து, நடவு செய்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிங்க : அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? - ஸ்டாலின் கண்டனம்