தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு பலகை - மதுரை விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு பலகை

மதுரை விமான நிலையத்தில் விமானங்களின் எண்கள், வருகை, புறப்பாடு, தாமத விவரங்களை தெரிவிக்கும் எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகையில் தமிழ் இடம் பெற்றுள்ளது.

Flight informations are displayed in Tamil
Flight informations are displayed in Tamil

By

Published : Oct 9, 2020, 11:17 AM IST

கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மதுரை விமான நிலைய வளாகத்தில் முன்பு அறிவிப்பு பலகையில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் அறிவிப்புகள்வெளியிடப்பட்டன. இதனால் இவ்விரு மொழிகள் தெரியாதவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தற்போது விமான நிலைய அறிவிப்பு பலகையில் அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தியுடன் தமிழிலும் ஒளிபரப்பப்படுகிறது.

முன்பு, விமான நிலையத்தில் இருந்த இரண்டு இடங்களில் இருந்த சிறிய திரையில் விமானங்களின் விவரங்கள் தமிழில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் நான்கு இடங்களில் உள்ள பெரிய திரைகளில் விமானங்களின் விவரங்கள் தமிழில் ஒளிபரப்பப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details