மதுரை:கோமதிபுரம் அருகே உள்ள ஆவின் நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார். இவர் நேதாஜி சாலையில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர் குமார் (22) என்ற இளைஞர், கடந்த 5 மாதங்களாக உதவியாளர் மற்றும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
ஜிதேந்தர், சஞ்சீவ்குமாரின் வங்கிப் பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில் விவகாரங்களை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சஞ்சீவ்குமார் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்ததை ஜிதேந்தர் நோட்டமிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கமாக மாலையில் தேநீர் வாங்கி வந்தபோது, அதில் மயக்க மருந்தை கலந்து சஞ்சீவ்குமாருக்கு கொடுத்துள்ளார்.