தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்மாயில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணி தீவிரம்! - குற்றச் செய்திகள்

மதுரை: அவனியாபுரம் அருகே கண்மாயில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கண்மாயில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
கண்மாயில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

By

Published : May 4, 2021, 10:25 PM IST

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகேவுள்ள அய்யன் பாப்பாக்குடி கண்மாய்க்கு இன்று (மே 4) மதியம் இரண்டு சிறுவர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதனையறிந்த அவர்களது பெற்றோர், உறவினர்கள் சிறுவர்களைக் கண்மாயிக்குள் இறங்கித் தேட தொடங்கினர். உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கண்மாய்க்குள் இறங்கி சிறுவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், கண்மாயில் பாதி அளவு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்திருப்பதால் சிறுவர்களை மீட்கும் பணியில் மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்தக் கண்மாயில் பலமுறை புகார் அளித்தும் ஆகாயத்தாமரை அகற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details