மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ஜெயந்தி என்பவர் வாடகைக்குபாலா கேபிள் நெட்வொர்க் என்ற நிறுவனமும், கார் உதிரிபாகங்கள் வைக்கும் கிடங்கும் வைத்துள்ளார்.
நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் ஹவுசிங் போர்டு பகுதியில் பட்டாசு வெடித்ததில் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கார் உதிரிபாகக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
Fire in spare part Godown in fireworks explosion, பட்டாசு வெடித்ததில் உதிரி பாகம் குடோனில் தீ விபத்து பழைய கார் உதிரி பாகம் என்பதால் தீ வேகமாகப் பரவியது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். அதனடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தீபாவளியன்று டெல்லியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து!