மதுரை நாராயணபுரம் பகுதியில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் நள்ளிரவு ஏற்பட்ட சிறிய தீயானது மளமளவென்று பரவி வணிக வளாகம் முற்றிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம் பகுதிகளைச் சேர்ந்த, 20 வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.