மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையின் நான்காவது தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டதால் நான்காவது தளத்திலிருந்த நோயாளிகள் உடனடியாகத் தரைத்தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.