தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் பதுக்கிய கூடாரத்தில் தீ விபத்து - மேலும் ஒருவர் உயிரிழப்பு

மதுரை: சட்டவிரோதமாக பெட்ரோல், டீசல் பதுக்கி வைத்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Feb 13, 2020, 4:54 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சட்டவிரோதமாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கூடாரத்தில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய கரடிக்கல்லைச் சேர்ந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

மேலும், நான்கு பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 11ஆம் தேதி கரடிக்கல்லைச் சேர்ந்த ஆசைத்தம்பி உயிரிழந்தார்.

பெட்ரோல் பதுக்கிய கூடாரத்தில் தீ விபத்து

இந்நிலையில், இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (35) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தீ விபத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காணாமல் போன இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details