மதுரை:விரகனூர் அருகேயுள்ள கோழிமேடு பகுதியில் ரமேஷ், அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமாக பிளாஸ்டிக் கழிவு பொருள்கள் சேகரிப்பு குடோன் உள்ளது.
இந்தக் குடோனில் இன்று (ஆக.2) மாலை திடீரென விபத்து ஏற்பட்டது.
மதுரை:விரகனூர் அருகேயுள்ள கோழிமேடு பகுதியில் ரமேஷ், அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமாக பிளாஸ்டிக் கழிவு பொருள்கள் சேகரிப்பு குடோன் உள்ளது.
இந்தக் குடோனில் இன்று (ஆக.2) மாலை திடீரென விபத்து ஏற்பட்டது.
குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் மளமளவென எரியத்தொடங்கின. இது குறித்த தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீர் மற்றும் ரசாயன நுரையைப் பயன்படுத்தி போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து காரணமாக விரகனூர் தொடங்கி தெப்பக்குளம் வரை வானில் கறும்புகை எழுந்தது. பிளாஸ்டிக் குடோன் உரிய அனுமதி பெற்று செயல்பட்டதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:இ-ருபி' என்றால் என்ன... எப்படி பயன்படுத்தலாம்?