தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை விமான நிலையத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: விமான நிலையத்தில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை செய்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மதுரை விமான நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

By

Published : Sep 16, 2020, 2:15 PM IST




தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகமாகப் பரவிவரும் நிலையில் சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சுகாதாரத் துறை அலுவலர்கள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 16) மதுரை விமான நிலையம் வளாகத்தில் சுகாதாரத் துறை வட்டார மருத்துவ அலுவலர் தங்கசாமி, ஆய்வாளர்கள் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டதோடு எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

இதில் 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு 3,200 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details