இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மே 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், இன்று முகக்கவசம் அணியாமல் சென்ற மதுரையைச் சேர்ந்த 447 நபர்களுக்கும் ஊரகப் பகுதியைச் சேர்ந்த 55 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதத் தொகையாக ரூபாய் 59 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.