தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உத்தரவு: ரத்து செய்ய கோரியவருக்கு அபராதம் - கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உத்தரவு

கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (வீட்டு வசதி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai Bench of Madras High Court
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jul 7, 2021, 6:34 PM IST

திருச்சி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான தேனூர் கிராமத்திலுள்ள இரு சொத்துக்கள் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சமசர உடன்படிக்கை உத்தரவின் அடிப்படையில், விற்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆர்.வி.சண்முகசுந்தரம் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது. அரசின் விலை நிர்ணய குழு அனுமதியில்லாமல் நிலம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி, விற்பனையை ரத்து செய்து திருச்சி கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைப் பதிவாளர் 2020ஆம் ஆண்டு (ஆகஸ்ட் 24) உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சண்முகசுந்தரம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கூட்டுறவு சங்க முறைகேட்டிற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். சமரச உடன்படிக்கையை மோசடியாக தாக்கல் செய்து உத்தரவு பெற்று, அதன் அடிப்படையில் சொத்தை குறைந்த விலைக்கு விற்றுள்ளனர்.

மோசடியில் தொடர்புடைய செயலர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை முடித்து, 3 மாதத்தில் மோசடியில் தொடர்புடைய அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரருக்கு அபராதம்

இந்த மோசடியில் தொடர்புடைய கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இத்தொகையை ஜூலை 28க்குள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மனுதாரர் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் சொத்துக்களில் ஒரு இஞ்ச் நிலம்கூட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் அரசால் நியமிக்கப்படும் விலை நிர்ணய குழுவின் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சொத்து விற்பனை தொடர்பான தணிக்கை நடத்தி, இதுபோன்ற மோசடி நடைபெற்றிருப்பதாக என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை: அரசின் உத்தரவாதம் ஏற்பு!

ABOUT THE AUTHOR

...view details