மதுரையில் கடும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், சில உயிரிழப்புகளும் கரோனா காரணமாக ஏற்பட்டது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க மதுரை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்களை நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் மதுரையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, சில தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானது.
விளம்பரமில்லாமல் சாதித்துக்காட்டும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
இதனையடுத்து, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தன்னுடைய வெளிநாடு வாழ் தமிழ் நண்பர்களிடம் உதவி கேட்டுக் கொண்டதை அடுத்து மதுரைக்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் கடல் வழியாக வந்து சேர்ந்துள்ளது. இதனை அவர் எந்தவித விளம்பரமும் இன்றி செய்துள்ளார்.
மேலும் திரவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்ட லாரி ஒன்றில் ஏற்பட்ட சிறிய பழுதையும் நிதியமைச்சரே சரி செய்து கொடுத்துள்ளார்.
பழுதைச் சரி செய்யும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பழுதை சரிசெய்ய லாரி பொறுப்பாளர்கள் முயன்றபோது அமைச்சரே தலையிட்டு சரி செய்து கொடுத்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பொறியியல் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாகப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு கரோனா தொற்று இல்லை