தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நிதியமைச்சராக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை’ - பிடிஆர் வருத்தம் - கூட்டுறவுத்துறை

கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் நிதியமைச்சராக எனக்கு திருப்தியில்லை என்று கூட்டுறவுத்துறை வார விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

By

Published : Nov 17, 2022, 10:58 PM IST

மதுரை: கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கூட்டுறவுத்துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது என்றாலும், தற்போது செயல்பாட்டு திறன் மற்றும் தகவல்தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த வேண்டும்.

கூட்டுறவுத் துறையில் தினமும் கடத்தல் அதிகரித்து சோதனைகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. கூட்டுறவு சங்கங்களை முழு கணினி மயமாக்காமல் இருப்பதால் பல பிழைகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகளில் உரிய நேரத்திற்கு செல்வதில்லை.

நிதியமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை. எனது தாத்தா மற்றும் தந்தை கூட்டுறவு சங்கங்களில் தலைவராக இருந்துள்ளனர். எனக்கு கூட்டுறவுத்துறையில் தனிப்பட்ட ஆர்வம் உள்ளது. உலகளாவிய அளவில் நமது கூட்டுறவுத்துறை செயல்படும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்” என்றார்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எம்எல்.ஏ பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'மயிலாடுதுறையினை பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்' - பி.ஆர். பாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details