மதுரை: தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி வார்டு எண் 57இல் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்திராணியை ஆதரித்து ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் வேன் மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "ஒரு தொகுதிக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமானவர் கவுன்சிலர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி இந்தியாவைவிட வளர்ந்த நாடுகளைவிட குறைவாகவே உள்ளது.
மதுரை மாநகராட்சித் தேர்தல் - பழனிவேல் தியாகராஜன் பரப்புரை வளர்ச்சிப் பாதையில் செல்லும்
குறிப்பாக மதுரை மாநகராட்சி மறுவரையறையில் குளறுபடி இருப்பதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் நாடியுள்ளேன். அதற்குள்ளாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. இருப்பினும் இதில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அன்னை மீனாட்சி அருளால் 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சூப்பர் பட்ஜெட் பெண்களுக்கு கல்வி, அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் வாய்ப்பளிக்கும் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும். மதுரைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் எந்தக் குறையும் இல்லாமல் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒரு ரூபாய் கூட பணப்பட்டுவாடா இல்லாமல் வெற்றிபெற
இருமுறை மத்திய தொகுதியில் ஒரு ரூபாய் கூட பணப்பட்டுவாடா இல்லாமல் வெற்றிபெற வைத்த மக்களுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் வரும் நிதிநிலை அறிக்கையில் எட்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்குப் பல்வேறு எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க உள்ளேன். அன்னை மீனாட்சி அருளால் எனக்கு இந்தப் பொறுப்பு கிடைத்துள்ளது.
மதுரை மாநகராட்சித் தேர்தல் - பழனிவேல் தியாகராஜன் பரப்புரை ஒவ்வொரு கவுன்சிலரும் திமுக கவுன்சிலராக இருந்தால் நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்வதற்கும் அவர்களைத் தட்டிக் கேட்பதற்கும் சரியாக இருக்கும். பணம் இன்று வரும், நாளை காணாமல்போகும். மக்கள் பணி செய்யும் வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பது வாக்காளர்களின் கடமையே" என்று பேசினார்.
மதுரை மாநகராட்சித் தேர்தல் - பழனிவேல் தியாகராஜன் பரப்புரை இதையும் படிங்க:'அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சிம்மசொப்பனமாக திமுக திகழ்கிறது' - பரப்புரையில் உதயநிதி