மதுரை: கரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் எனச் சித்தரிக்கும் வகையில் யூடியூபர் Maridhas காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த காணொலிக்கு எதிராகக் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 2020 ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று 292 A, 295 A, 505 (2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கு தன் மீதான விரோதத்தில் பதியப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யவும் கோரி மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.