தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மண்டலத்தில் 50% கூடுதலாக பாஸ்போர்ட் வழங்கல் - மண்டல அதிகாரி வசந்தன் - zonal passport office

2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு மதுரை மண்டல அளவில் 50 சதவீதம் கூடுதலாக பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன, என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.

மண்டல அலுவலர் வசந்தன்
மண்டல அலுவலர் வசந்தன்

By

Published : Jan 26, 2023, 1:58 PM IST

மண்டல அலுவலர் வசந்தன் அளித்த பேட்டி

மதுரை: மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், மண்டல பாஸ்போர்ட் அலுவலராக வசந்தன் கடந்த 9 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "மதுரை மண்டல அளவில் 2021 ஆம் ஆண்டில் கரோனா காலகட்டத்தில் 1,51,905 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன, 2022-ஆம் ஆண்டில் 2,27,812 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் படி 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 50 சதவீத பாஸ்போர்ட்கள் கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளன. மதுரை மண்டலத்துக்கு உட்பட பாஸ்போர்ட் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,295 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் விண்ணப்பம் செய்த அடுத்த நாள் விண்ணப்பதாரர் அழைக்கப்படுகிறார்கள்.

காவல்துறை விசாரணை முடிந்த 3 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றது. இதுவரை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் 6,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. காவல்துறை விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக மதுரை, கன்னியாகுமரி, தேவக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் வருகின்றன. இந்திய அளவில் பாஸ்போர்ட் வழங்குவதில் குறைந்த நிலுவை பட்டியல் வைத்திருக்கும் அலுவலகங்களில் மதுரையும் ஒன்று" என்றார்.

இதையும் படிங்க:Palani kumbabishekam: மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details