மதுரை அரசு இராசாசி மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. நாள்தோறும் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இம்மருத்துவமனை தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் காவலர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள் அவ்வப்போது தங்கி ஓய்வெடுப்பதற்காக மருத்துவமனையின் வெளியே சிறிய குடிசை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் நான்கு பேர் மட்டுமே அமர முடியும்.
இந்நிலையில் நேற்றிரவு மதுரையில் பலத்த மழை பெய்தது. அப்போது காவல் பணியிலிருந்த காவலர்கள் 10 பேர், சுகாதாரப் பணி ஊழியர்கள் மூன்று பேர் என மொத்தம் 13 பேரும் அந்தக் குடிலுக்குள் தகுந்த இடைவெளிக்கு வாய்ப்பேயின்றி நெருக்கமான முறையில் நின்றுகொண்டுதான் சமாளிக்க வேண்டியிருந்தது.
இதனால் அங்கு பணியாற்றும் காவலர்களும், பணியாளர்கள் மிகுந்த அச்சத்தோடும், நெருக்கடியோடும் பணியாற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை மதுரை அரசு இராசாசி மருத்துவமனை நிர்வாகம் கவனித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டால் அவர்களுக்கும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.
கரோனா மருத்துவமனையில் அச்சத்துடன் பணிபுரியும் காவலர்கள்: மதுரை மருத்துவமனை நிர்வாகம் கவனிக்குமா?
மதுரை: கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 13 பேர் ஓய்வெடுக்க பாதுகாப்பான அறையின்றி மிகுந்த அச்சத்துடன் பணியாற்றிவருகின்றனர். இதனை மதுரை அரசு இராசாசி மருத்துவமனை நிர்வாகம் கவனத்தில்கொள்ளுமா?
மதுரை மருத்துவமனை நிர்வாகம்
இதையும் படிங்க: இந்திய-திபெத் எல்லை படையில் மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு!