தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை மிரட்டல் விடுத்த மாமனார்: ரயில் முன் பாய்ந்த மருமகன்! - madurai district news

மதுரை அருகே மருமகனை கொலை செய்வதாக மாமனார் மிரட்டியதை அடுத்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மருமகனை பொதுமக்கள் காப்பாற்றினர்.

father-in-law-made-death-threats-nephew-attempted-suicide
கொலை மிரட்டல் விடுத்த மாமனார்: ரயில் முன் பாய்ந்த மருமகன்

By

Published : Sep 3, 2021, 1:53 PM IST

மதுரை:திருமங்கலம் அடுத்துள்ள கரிசல் பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (27). சமத்துவபுரத்தை சேர்ந்த ஜாபர் ராஜாமுகமது என்பவரின் மகளை இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

பாலமுருகனின் மனைவிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் செய்தியை அறிந்த பாலமுருகன் மனமுடைந்து, தனது மாமனார் ஜாபர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக பாலமுருகனை கொலை செய்துவிடுவதாக ஜாபர் ராஜாமுகமது மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பாலமுருகன் கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் நல்வாய்ப்பாக இதனைக் கண்ட பொதுமக்கள் பாலமுருகனை மீட்டு திருமங்கலம் நகர் காவலர்களிடம் ஒப்படைத்தனர். தற்போது காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி மூலம் சிக்கிய கோழி திருடர்கள்!

ABOUT THE AUTHOR

...view details