மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத்தெருவில் வசித்து வருபவர் அப்துல் சமது. இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு அரப்புஸ்ரா என்ற பெண் பிள்ளையும் அகமது என்ற ஆண் பிள்ளையும் உள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற குடும்பச் சண்டையில் அப்துல், மும்தாஜை கொடூரமாகத் தாக்கியதால் மும்தாஜ் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அரப்புஸ்ரா, தனது தாய் மும்தாஜை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த அப்துல் சமது மகளை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
மேலும், அத்தெருவில் வசித்துவருபர்கள் அப்துல் சமது, இதுபோன்று பொதுமக்களை மிரட்டி ரவுடித்தனம் செய்துவருவதாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர் இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : பெற்ற மகளையே அடித்து துன்புறுத்தும் கொடூரத் தந்தை - அதிர்ச்சிக் காணொலி