தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழுகிப் போயிருக்கின்றன.
தொடர் மழையால் அழுகிய பயிர்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் தலைமையில் விவசாயிகள் திங்களன்று(ஜன.11) காலை அழுகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் அந்த மனுவில், "மதுரை மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், தொடர்ந்து பெய்த மழையினால் நீரில் மூழ்கியும், தரையில் சாய்ந்தும், முளைத்தும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அழுகிய பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் கடன் வாங்கி ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறிப்பாக குலமங்கலம், சமயநல்லூர், தேனூர், கட்டபுலி நகர், ஊர்மெச்சிகுளம், செல்லம்பட்டி ஒன்றியத்தில் கீழப்பட்டி என இந்த பகுதியினை சேர்ந்த விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
எனவே மாவட்டம் முழுவதும் இன்னும் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாதிப்பிற்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்கி மதுரை மாவட்ட விவசயிகளை பாதுகாத்திட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
அழுகிய பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்!