தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி - madurai latest news

கரோனா ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பின்னர் மதுரை மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுவது விவசாயிகள், வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மல்லிகை கிலோ ரூ.700க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி
மதுரை மல்லிகை கிலோ ரூ.700க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

By

Published : Jul 15, 2021, 7:22 PM IST

Updated : Jul 15, 2021, 8:20 PM IST

மதுரை: கரோனா ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பின்னர் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர்ச் சந்தை, முழுவீச்சில் இயங்கி வருகின்றது.

தொடர்ச்சியாக பூக்களின் விற்பனையிலும் கணிசமான விலையேற்றம் அதிகரித்து வருகிறது.

மதுரை மல்லி விற்பனை குறித்த காணொலி

இந்நிலையில் இன்று (ஜூலை 15) மதுரை மலர்ச் சந்தையில் மதுரை மல்லிகை ரூ.700, அரளி ரூ.250, சம்பங்கி ரூ.200, செவ்வந்தி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.150, தாமரை ஒன்றுக்கு ரூ.10, பிச்சி ரூ.500, முல்லை ரூ.400 என லாபகரமான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

பூக்களின் விலை மேலும் உயரும் என எதிர்பார்ப்பு

இதுகுறித்து சில்லறைப் பூ விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் பேசுகையில், "கரோனா தொற்று ஊரடங்கிற்குப் பிறகு, தற்போதுதான் மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக விலை ஏற்றம் கண்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க:தொடர்ந்து உச்சம் தொடும் தங்கம் விலை

Last Updated : Jul 15, 2021, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details