மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சாத்தியார் அணை உள்ளது. 29 அடி ஆழமுள்ள இந்த அணை ஏறக்குறைய நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாக திகழ்கிறது. ஆனால் போதிய நீர் வரத்து இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கிறது.
சாத்தியார் அணைக்கு நீர் கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை - சாத்தியார் அணை
மதுரை: சாத்தியார் அணைக்கு நீர் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இதன் மூலம் பாசன வசதி பெறும் சுமார் பத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், நேற்று (ஆகஸ்ட் 21) சாத்தியார் அணையில் ஒன்று கூடினர். தொடர்ந்து வறண்டு கிடக்கும் சாத்தையாறு அணைக்கு அணைப்பட்டி பேரணையில் இருந்தோ, வைகை அணையிலிருந்தோ தண்ணீர் கொண்டு வந்து விவசாய நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக விரைவில் விவசாயிகள் குழுவாக சென்று முதலமைச்சர், மத்திய வேளாண் அமைச்சர், பிரதமரை சந்தித்து இதற்காக நிதி ஒதுக்கி விரைவில் நடவடிக்கை எடுக்க கோரி முறையிட முடிவு செய்துள்ளனர்.