தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து, தோட்டத்துக் காய்கறிகளை விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள், தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்தாகக் கூறி, அணைக்கரை முத்துவைச் சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்த உயிரிழந்த விவசாயின் மனைவி பாலம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், "விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை வனத்துறையினர் தாக்கியதன் காரணமாகவே உயிரிழந்தார். ஆகவே தனது கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறாய்வு செய்யவும், தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.