மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தியார் அணைக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப்பணித்துறை அலுவலர்களிடமும் இன்று (டிச.2) சாத்தியார் அணை பாசன விவசாயிகள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் கீழ சின்னம்பட்டி ஊராட்சித் தலைவர் ரமேஷ் செல்வராஜ் தெரிவித்ததாவது, "சாத்தியார் அணைக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சிறு மலைப்பகுதியில் இருந்து அணைக்கு வருகின்ற தண்ணீர் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.