மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 7 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிந்தன.
தண்ணீரில் மிதந்து விவசாயி போராட்டம் இந்நிலையில் மதுரை மாவட்டம் தும்மகுண்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இன்பராஜ் என்பவர் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், திருமங்கலம் பகுதியில் 58 கால்வாய்களில் நிரந்தரமாக தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: மக்கள் நலப் பணியாளர்கள் ரத்தம் விற்கும் போராட்டம்