மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரஜினி ரசிகர் மன்றத்தினர், ரஜினியின் 70ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அதேப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஒன்றை தத்தெடுத்து ரூ.1.20 லட்சம் செலவில் கட்டட பராமரிப்பு, வர்ணம் பூசுதல் உள்ளிட்டப் பணிகளை செய்துள்ளனர்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளியை தத்தெடுத்த ரசிகர்கள்! - ரஜினிகாந்த் செய்திகள்
மதுரை: ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியை தத்தெடுத்து ரூ.1.20 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகளை செய்துள்ளனர்.
madurai
இதனால் அந்தப் பள்ளி தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. நேற்று அங்கு சென்ற ரஜினி ரசிகர்கள் அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினர். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியில் பல வருடங்களாக கட்டட பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தன் வீட்டையே ரஜினி அருங்காட்சியமாக மாற்றிய மதுரை ஓவியர்!