தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுப்பானடி ரயில்வே கேட் அருகே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை! - madurai latest news

மதுரை: முன்விரோதம் காரணமாக மேல அனுப்பானடி பகுதியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கொலை  மேல அனுப்பானடி கொலை  மதுரை கொலை  மதுரை செய்திகள்  madurai latest news  mela anupandi murder
மதுரை: ரயில்வே கேட் அருகே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை

By

Published : Jul 21, 2020, 1:28 PM IST

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், மீது மதுரை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இன்று (ஜூலை 21) அதிகாலை முத்துக்குமார் அனுப்பானடி ரயில்வே கேட் அருகே நடந்து சென்ற போது, இவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் முத்துக்குமாரை கொடூரமாக வெட்டியுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முத்துக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இக்கொலை குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:கல்லூரி மாணவர் கொலை: நடுரோட்டில் சடலத்தை வைத்து சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details