தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அட்டாக் பாண்டி" மதுரை சிறைக்கு மாற்றம் - சிறைத்துறை! - Madurai Central Prison

மதுரை: 'பொட்டு சுரேஷ்' வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியான "அட்டாக் பாண்டி", பாளை சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

Famous Rowdy Attack Pandi in Madurai Central Prison
Famous Rowdy Attack Pandi in Madurai Central Prison

By

Published : Dec 12, 2019, 5:08 PM IST

மதுரை மாவட்டம் கீரைத்துரையைச் சேர்ந்தவர் "அட்டாக்பாண்டி". இவர் 'பொட்டு சுரேஷ்' கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அட்டாக் பாண்டி தன் உடல்நலப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு, தன்னை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடக்கோரி cயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் "அட்டாக்பாண்டி மதுரையைச் சேர்ந்தவர். அவரை மதுரை சிறையில் அடைத்தால் அவரை பார்க்க உறவினர்கள், சிறைக்கு வருவார்கள்.

இதனால் தேவையற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அவரை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடக்கூடாது" எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்," அட்டாக் பாண்டி தற்போது சில வழக்கில் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதால், கீழமை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கத்தியை எடுத்த ரவுடி, துப்பாக்கியால் சுட்ட போலீஸ்.!

ABOUT THE AUTHOR

...view details