தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன் - மனைவியை கொன்ற கணவன்

மதுரையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

crime, husband killed wife
crime

By

Published : Nov 10, 2021, 11:07 PM IST

மதுரை: மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். ரயில்வேயில் சிக்னல் ஆபரேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மேரிக்குட்டி. திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை.

இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இன்றும் (நவ.10) தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவகுமார் மேரிக்குட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து மதுரை எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் மருமகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details