தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி கணக்கை பயன்படுத்தி பிரதமர் பெயரில் ட்வீட் - போலீஸ் வலைவீச்சு - பிரதமர் மோடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட் செய்தது போல, போலியாக ட்விட் செய்த நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Prime Minister
Prime Minister

By

Published : Mar 19, 2020, 10:59 AM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்குபோல், போலியான கணக்கு ஒன்றை உருவாக்கி காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ட்விட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், கரோனா காரணமாக உடனடியாக பல்கலைகழகத்தை மூடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அந்த போலி ட்விட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பிரதமர் ட்விட் செய்தது போல ட்விட்

இதையடுத்து காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் போலி ட்விட் செய்த நபர் குறித்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details