தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் பங்க்கில் கள்ள நோட்டு மாற்றம் - ஸ்ரீஹரி பெட்ரோல் பங்க்

மதுரை: பெட்ரோல் பங்க்கில் கள்ள நோட்டை மாற்ற முயற்சி செய்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கள்ள நோட்டு
fack-money

By

Published : Dec 18, 2019, 10:36 PM IST

மதுரை அரசரடி பகுதியில் செயல்பட்டுவரும் ஸ்ரீஹரி பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் பெட்ரோல் நிரப்பிய பிறகு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர், அதனை பரிசோதனை செய்த ஊழியர் அது கள்ள நோட்டு என்பதை அறிந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஜெயசிங் என்பது தெரியவந்தது, இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீஹரி பெட்ரோல் பங்க்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலைய வாசலில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை சாலையில் வீசி சென்ற குற்றவாளிகள் இன்னும் பிடிபடாத நிலையில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 1.6 கிலோ தங்கம் கடத்தல் - நால்வர் கைது

ABOUT THE AUTHOR

...view details