தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி காந்தி மார்க்கெட் திறக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - மதுரைக் கிளை - மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

மதுரை: திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை
திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Sep 17, 2020, 5:39 PM IST

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிரந்தர கடைகள், தரைக்கடைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் என மூன்றாயிரம் கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. தற்போது கரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும் உத்தரவிடக்கோரி திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் செப்டம்பர் 28ஆம் தேதி காந்தி மார்க்கெட்டை திறக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அக்டோபர் 13ஆம் தேதி வரை காந்தி மார்க்கெட்டை திறப்பதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details