தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘96’ பாணியில் நடந்த ஒன்றுகூடல்: ஆனந்தக் கண்ணீர் வடித்த வழக்கறிஞர்கள்!

மதுரை: மதுரை சட்டக்கல்லூரியில் 1986ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள், 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைந்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

madurai

By

Published : May 4, 2019, 5:20 PM IST

மதுரை சட்டக்கல்லூரியில் 1986ஆம் ஆண்டு பயின்ற 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றிணையும் நெகிழ்ச்சி மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற 96 படத்தின் பாணியில், இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களில் பலரும் இன்று நீதிபதியாகவும், அரசியலில் முக்கியப் பொறுப்புகளிலும், மிகப்பெரிய அரசு வழக்கறிஞர்களாகவும் இருந்து வருகின்றனர்.

மாணவர்களாய் மாறிய இந்நாள் பெற்றோர்கள்!

இந்நிலையில், இந்த சந்திப்பிற்குப் பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தற்போதைய வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ஆனந்தமாய் அனைவரும் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் ஒன்றிணைவதற்கு சமூக வலைதளங்களே மிகப்பெரும் பங்காற்றியுள்ளதாகவும், அது அனைத்திற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் எனவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details