மதுரை:சிவகங்கை மாவட்டம் மலைக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அருள்மிகு சாந்தி வீரன் கோயில் திருவிழா அமைதியான முறையில் நடைபெறுவதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாலசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (ஜூலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "ஸ்ரீ சாந்தி வீரன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதம் கொண்டாடப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக கிராமத்தின் கோயில் திருவிழாக்கள் இணை ஆணையரின் உத்தரவின்படி யாருக்கும் முன்னுரிமை வழங்காமல் அனைவரும் சமமாக திருவிழா நடைபெறுகிறது.
ஆனால் ஜெயபால் உள்ளிட்ட சிலர் திருவிழாவில் அமைதியை கெடுக்கும் வகையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் தனக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறி பிரச்சனை எழுப்பி வருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.