தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் சமாதியில் பட்டாக்கத்தியுடன் சக ரவுடிகள் சூளுரை! - encounter rowdy cemetry in madurai

மதுரை: என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடியின் சமாதி முன்பாக பட்டாக்கத்தியோடு சூளுரைக்கும் சக ரவுடிகளின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ரவுடியின் சமாதி முன்பு பட்டாக்கத்தியுடன் சபதம்
ரவுடியின் சமாதி முன்பு பட்டாக்கத்தியுடன் சபதம்

By

Published : Sep 25, 2020, 2:48 PM IST

மதுரை மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடிகள் மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு சென்ற 2018ஆம் ஆண்டு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்ய முயன்றபோது பிரபல ரவுடி முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி இருவரும் துப்பாக்கியால் காவலர்களைத் தாக்க முயன்றனர்.

அதனைத் தொடர்ந்து தற்காப்புக்காக காவல் துறையினர் இரண்டு ரவுடிகளையும் என்கவுன்டர் செய்தனர். இருவரின் உடல்களும் அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில் அவர்களுடைய சமாதி முன்பு ரவுடிகள் சிலர் பட்டா கத்தியை வைத்து சூளூரைப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ரவுடியின் சமாதி முன்பு பட்டாக்கத்தியுடன் சூளுரை

இந்தச் சம்பவம் மதுரை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரையில் குடிபோதையில் இருந்த ரவுடி படுகொலை

ABOUT THE AUTHOR

...view details