தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய அரசின் மின்சாரச் சட்டம் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்' - மாணிக்கம் தாகூர் எம்.பி., - free electricity band news

மதுரை: மத்திய அரசின் மின்சாரச் சட்டம் விவசாயிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

manickam-tagore-mp
manickam-tagore-mp

By

Published : May 27, 2020, 8:10 PM IST

மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நேரு சிலைக்கு, அவரது நினைவு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், "மத்திய அரசு அமல்படுத்த உள்ள மின்சாரச் சட்டம் விவசாயிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கும், எனவே அச்சட்டத்தினை தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை எதிர்த்தது போல் அல்லாமல் கடுமையான எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து அவர், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்திலிருந்து மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து வருகிறது. காங்கிரஸ் கூறியது போல் சாதாரண மக்களுக்கு 7,500 ரூபாயும், சிறு, குறு தொழில் புரிவோர்களுக்கு 10 ஆயிரமும் மாதம்தோறும் வழங்கியிருந்தால் மக்கள் வாழ்வாதாரம் இந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்காது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது' - ஜோதிமணி எம்.பி!

ABOUT THE AUTHOR

...view details