இது தொடர்பாக் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ”பொங்கிபட்டி அரசு ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் தமிழ் வழிக் கல்வியை ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். மின்வாரியத்தில் கேங்மேன் பணியில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றினேன். இதையடுத்து 5,000 கேங்மேன் பணிகள் காலியாக உள்ளதாக மின்வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு கேங்மேன் பணிக்காக விண்ணப்பித்து, உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நடந்த எழுத்து தேர்வின் முடிவுகள், கடந்த பிப்ரவரியில் வெளியானது. அதில் 63 மதிப்பெண்கள் பெற்றும் எனக்கு பணியாணை வழங்கவில்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நான் கேங்மேன் பணிக்காக தேர்ச்சி பெற்றுள்ளேன் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இதேபோல் திருச்சியை சேர்ந்த ஜானகிராமன் என்பவரும் மனு செய்திருந்தார்.