மதுரை: திருப்பாலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது , "பாதாள சாக்கடை, குடிநீர், சாலை வசதிகள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுக்கள் மீது துறை ரீதியாக பிரிக்கப்பட்டு ஒரிரு மாதங்களில் குறை தீர்க்கப்படும். மனுக்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளமாட்டோம், அவற்றின் மீது உரிய நடவடிக்கையும் எடுப்போம்.
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் நிலை குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.