தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Video In: உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட மூதாட்டி - பதைபதைக்க வைக்கும் காணொலி - தாக்கப்பட்ட மூதாட்டி

Video In: மேலூர் அருகே இடப்பிரச்னை காரணமாக மூதாட்டியை, நான்கு பேர் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கிய வீடியோ வெளியாகி, காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

eighty years old lady was brutally assaulted  eighty years lady brutally assaulted in madurai  land problem  women brutally attacked in madurai  உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட மூதாட்டி  நிலத் தகராறு  மதுரையில் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட மூதாட்டி  தாக்கப்பட்ட மூதாட்டி  நிலத் தகராறால் தாக்கப்பட்ட மூதாட்டி
தாக்கப்பட்ட மூதாட்டி

By

Published : Dec 27, 2021, 9:52 PM IST

மதுரை: Video In: மேலூர் அருகே கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி லட்சுமி. அவருக்கும் அருகிலுள்ள ராஜாங்கம் என்பவர் வீட்டிற்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள்ளே அடிக்கடி தகராறும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று 80 வயது மூதாட்டி மற்றும் அவரது மகள் ஆகியோரை, அண்டைவீட்டார் 4 பேர் சேர்ந்து உருட்டுக் கட்டைகளால் தாக்கியுள்ளனர். அப்பொழுது மூதாட்டி வளர்த்த நாய், அவர்களைத் தாக்க முற்படும் பொழுது நாயை அவர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர்.

மூதாட்டி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதை அருகிலிருந்த வீட்டுக்காரர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்தக் காட்சிகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் லட்சுமியின் வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட மூதாட்டி

இது தொடர்பாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் இக்காட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த மூதாட்டி மற்றும் அவரது மகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக கொட்டாம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Bus Accident CCTV: லாரி மோதி கவிழ்ந்த பேருந்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details