தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2021, 8:41 PM IST

ETV Bharat / state

மதுரையில் அக்.20 ஆம் தேதி கல்விக் கடன் மேளா!

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், பிற பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவும் வகையில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி கல்விக் கடன் மேளா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

மதுரை
மதுரை

மதுரை:மாணவர்களுக்கான கல்விக் கடன் மேளா குறித்துமதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் இன்று (அக்.17) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில பொருளாதார சூழல் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில்,

அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிட ஏதுவாக கல்விக்கடன் பெற உதவும் வகையில், சிறப்புத் திட்டத்தினை மதுரை மாவட்டத்தில் நடப்பு 2021-2022ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 'கல்விக்கடன் முனைப்புத் திட்டம் மதுரை 2021 -2022' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்கன் கல்லூரியில் கல்விக்கடன் மேளா

இத்திட்டத்தினை செயல்படுத்த ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் M-பிரிவில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அக்டோபர் 20ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை "கல்விக்கடன் மேளா" என்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் கலந்து கொள்கின்றன. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'எப்போவும் எங்களுக்கு தோனிதான் முக்கியம்' - சிஎஸ்கே சீக்ரெட்

ABOUT THE AUTHOR

...view details