தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி! - EB worker died

மதுரை: மின்சார கோபுரத்தில் உள்ள பழுதை சரிபார்க்க சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

repairing in transformer

By

Published : Jun 4, 2019, 11:44 PM IST

மதுரை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவர் மேல அனுப்பானடி பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் கோபுரம்

ABOUT THE AUTHOR

...view details