நூற்பாலைகள் சங்கத்தின் வெங்கடாசலம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந் மனுவில், “பொது முடக்கத்தால் மார்ச் 24ஆம் தேதி முதல் நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வேலை முடக்க காலத்தில் அனுமதிக்கப்பட்ட மின் அழுத்த அளவிற்கான கட்டணத்தில் 20 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனை மின் ஒழுங்குமுறை ஆணையமும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த விதிமுறையை மீறி உயரழுத்த மின் இணைப்புக்கான கட்டணத்தில் 90 சதவீதம் செலுத்துமாறு மின்வாரியத்திலிருந்து ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரசீதுகளை திரும்பப் பெற்று 20 சதவீத கட்டணத்துடன் புதிய ரசீது அனுப்ப உத்தரவிட வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உயரழுத்த மின் இணைப்புக்கு 90 சதவீத கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்"
என்று கூறியிருந்தார்.