தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்கள் கல்லூரி முன்பு குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்கள்

மதுரை கோரிப்பாளையம் ஏவி மேம்பாலம் அருகே பெண்கள் கல்லூரி வாசலில் குடித்துவிட்டு மாணவியின் பெற்றோரை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Meenakshi Government Arts College for Women  Drunken youths attack  madurai news  பெண்கள் கல்லூரி முன்பு குடிபோதையில் தகராறு  பெண்கள் கல்லூரி  மதுரை
பெண்கள் கல்லூரி முன்பு குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்கள்

By

Published : Nov 5, 2022, 10:32 AM IST

மதுரை: கோரிப்பாளையம் அருகே மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (நவம்பர் 4) இளைஞர்கள் சிலர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஹார்ன் அடித்து கொண்டும், சத்தமிட்டு கொண்டும் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்தனர். இதனால் அந்த சாலையின் சென்ற அனைவரும் பீதி அடைந்து சிதறி ஓடினர்.

கல்லூரியில் பயிலும் தங்கள் மகளை அழைத்துச் செல்வதற்காக வந்த தந்தை ஒருவர் இளைஞர்களின் இந்த செயலை தட்டி கேட்டுள்ளார். உடனே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த அந்த இளைஞர் கூட்டம் மகளின் கண் முன்பாகவே அந்த தந்தையை தாக்கியுள்ளது.

பெண்கள் கல்லூரி முன்பு குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்கள்

இதனால் அந்த தந்தை பலத்த காயமடைந்தார். கல்லூரி வாசலிலேயே நடந்த இந்த மோதலால் கல்லூரி மாணவிகளும் அலறியடித்து ஓடியுள்ளனர்.

இதையும் படிங்க: ‘தன்னை கொலை செய்ய முயன்றவர்கள் யார் என தெரியும்’ - இம்ரான் கான்

ABOUT THE AUTHOR

...view details