மதுரை கரிமேடு காவல் நிலையத்தற்குட்பட்ட மேலப்பொன்னகரம் பகுதியில் உள்ள தமிழன் தெருவில் ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் செல்லும் பள்ளி வாகனங்களை மறித்தும் சாலையில் செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டும் பிரச்னை செய்துகொண்டும் இருந்தார்.
அப்போது அதே பகுதியில் உள்ள பலர் அவரை தடுக்க முயற்சி செய்தனர். அந்தசமயம் அவர் ஓங்கி மிதித்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சாலையில் செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் நபர் இது குறித்து தகவலறிந்து வந்த கரிமேடு காவல் துறையினர் போதையில் இருந்தவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் பாபு என்பது தெரியவந்தது. விஜய் பாபு பள்ளி அருகே மதுபோதையில் அரை நிர்வாணமாக பொதுமக்களிடம் தகாதமுறையில் நடந்து கொண்ட காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இளைஞர் கொலை வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை!