தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எங்களுக்கு பங்காளி உறவு முறை... முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு

தமிழ்நாட்டில் 52 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வருவதால் திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை ஆகும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு

By

Published : Aug 26, 2022, 6:41 PM IST

மதுரை: பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள இந்திராணி, நிதியமைச்சரின் நிழலாக செயல்படுகிறார். நிதியமைச்சர் கீ கொடுத்தால் மட்டுமே மேயர் பொம்மை போல செயல்படுகிறார். மதுரை மாநகராட்சியில் மேயர் எந்தவொரு பணிகளையும் செயல்படுத்தவில்லை.

மதுரை மாநகராட்சி இயங்குகிறதா? இயங்கவில்லையா எனத் தெரியவில்லை. மதுரை மாநகராட்சி மட்டுமல்ல, தமிழ்நாடு அரசு செயல்படாத அரசாக உள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒன்றும் பேசி வருகிறது.

சினிமாத்துறை உதயநிதி ஸ்டாலின் கையில் உள்ளது. உதயநிதிக்கு படம் வழங்காததால் பல படங்கள் முடங்கி கிடக்கின்றன. சபரீசன் கண் அசைவுக்காக அலுவலர்கள் காத்திருக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். மக்களை கவனிக்கவில்லை.

அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, எடப்பாடியார் தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திமுக அரசு சிறப்பாகச்செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் சிங்கமாக செயல்படுவதாகக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரைச் சந்திக்கும் போது பணிந்து செயல்படுகிறார். முதலமைச்சர் விளம்பரம்தேடாமல் மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு

தமிழ்நாட்டில் 52 ஆண்டுகளாக, திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வருவதால் திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை ஆகும். தரம் குறைந்து பேசும் அரசியல்வாதிகள் நீடித்து செயல்பட்டதில்லை. 2026ஆம் ஆண்டில் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும். 2026ஆம் ஆண்டில் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும். 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களைப் பிடிக்கும்" எனக்கூறினார்.

இதையும் படிங்க:மக்கள் சமச்சீர் ஆன வளர்ச்சி அடைவது தான் திராவிட மாடல்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details