விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்குத் தடையேதுமில்லை. அந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடையில்லாததால், பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பாகும்.
தொடர்ந்து, சென்னை ஐஐடியில் பெரிய அளவிற்கு இதுவரை பலர் தற்கொலை செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவ்வித உற்சாகமுமின்றி வெளியேறக்கூடிய சூழலை ஐஐடி உருவாக்கிக்கொண்டிருக்கிறது.