தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேயர் தேர்தல்: மதுரையைக் குறிவைத்த பாஜக! - மதுரை மாவட்ட பாஜக தலைவர்

தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய திறன் பாஜகவுக்கு உள்ளது என மதுரை மாவட்ட பாஜக தலைவர் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், மேயர் தேர்தல் நேரடியாக நடைபெற்றால் மதுரை மாநகராட்சியை பாஜகவிற்கு ஒதுக்க அழுத்தம் கொடுப்போம் என்றார்.

தனித்து நின்றாலும் பாஜக வெல்லும்
தனித்து நின்றாலும் பாஜக வெல்லும்

By

Published : Nov 13, 2021, 3:57 PM IST

மதுரை மாவட்ட பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் பாஜக அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக நிறைவேற்றவில்லை. கண்துடைப்பாக மூன்று ரூபாய்தான் குறைத்தார்கள்.

மேயர் தேர்தல் நேரடியாக நடைபெற்றால் மதுரை மாநகராட்சியை பாஜகவிற்கு ஒதுக்க அழுத்தம் கொடுப்போம். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்க முடியும். தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய திறன் பாஜகவிற்கு உள்ளது. தனித்து நிற்க பாஜக தயாராக உள்ளது.

தனித்து நின்றாலும் பாஜக வெல்லும்

இந்தத் தேர்தலில் எங்கள் வாக்கு வங்கி பலத்தைக் காண்பிப்போம். அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது. தனித்து நிற்பது குறித்து மாநிலத் தலைமைதான் முடிவுசெய்யும்" என்றார்.

இதையும் படிங்க:கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் - தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details