மதுரையைச் சேர்ந்த மருத்துவர் அமுதகுமார் மருத்துவச் சேவையில் சிறந்து பணியாற்றியமைக்காக இங்கிலாந்து பாராளுமன்றம் "வாழ்நாள் மருத்துவ சாதனையாளர்" விருதும், லண்டன் உலக தமிழ்ச் சங்கம் சார்பில் "உலக மருத்துவ சாதனையாளர்" விருதும் வழங்கி கௌரவித்துள்ளனர்.
இங்கிலாந்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த மருத்துவர் அமுதகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மருத்துவ சேவைக்கான உயரிய விருது கடந்த 22ஆம் தேதி இங்கிலாந்து பாராளுமன்றம் "வாழ்நாள் மருத்துவ சாதனையாளர்" விருது வழங்கியது. அதேபோல் லண்டன் உலக தமிழ்ச் சங்கம் சார்பில் "உலக மருத்துவ சாதனையாளர்" விருதும் வழங்கப்பெற்றேன்’ என்றார்.