மதுரை, காந்தி மியூசியம் சாலையிலுள்ள மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்காவில் 'காதலர்கள்' போர்வையில் எல்லை மீறும் 'சில்மிஷ' ஜோடிகளை திருத்த 'நாய் காதல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என கடுமையாக எச்சரித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானம் அருகே அமைந்துள்ளது ராஜாஜி சிறுவர் பூங்கா. மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என குடும்பத்தோடு இங்கு பொழுது போக்குவது வழக்கம். மதுரையின் வேறு சில பொழுதுபோக்கு பூங்காக்களில் இதுவும் ஒன்று.